[X] Close

’எங்க நிலத்தை பாதுகாக்க எங்களுக்குத் தெரியும்’: மிரட்டும் ஃபகத்தின் ‘மாலிக்’ ட்ரெய்லர்

சினிமா

Actor-fahadh-faasil-malik-trailer-release

நடிகர் ஃபகத் ஃபாசிலின் ‘மாலிக்’ பட ட்ரெய்லர் இன்று வெளியாகி இருக்கிறது.


Advertisement

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில், ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘மாலிக்’ வரும் 15 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதனையொட்டி இன்று, இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ட்ரெய்லரில் சுலைமான் கதாபாத்திரத்தில் துடிப்பான இளைஞராய் வரும் ஃபகத் ஃபாசில் ’எங்கள் நிலத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும்’ என்று உரக்கப் பேசி நில உரிமைக்காக மக்களையும் போராட வைக்கிறார். அதேசமயம், அரசியல்வாதி கெட்டப்பில் வயதான ஃபகத்தின் முதுமைப் பருவமும், நிமிஷா சஜயன் வயதான தோற்றங்களும் மிரட்டலாக அமைக்கப்பட்டு கவனம் ஈர்க்கின்றன.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close