[X] Close

தொடரும் தடுப்பூசி பற்றாக்குறை: டெல்லி செல்லும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாடு

Minister-Ma-Subramanian-has-said-that-he-will-visit-Delhi-tomorrow-to-talk-about-the-shortage-of-vaccines-in-Tamil-Nadu
தமிழ்நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதால், நாளை மறுநாள் டெல்லி சென்று பேச இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
சென்னை கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் மருத்துவமனைக்கு டோக்கியோ தமிழ் சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிமுக ஆட்சியில் 4 லட்சம் தடுப்பூசி வீணடிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு லட்சம் தடுப்பூசிகள் மிச்சப்படுத்தப்பட்டு கூடுதலாக செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
தற்போது தடுப்பூசி கையிருப்பு இல்லாத நிலையில், இதுதொடர்பாக நாளை மறுநாள் டெல்லி செல்ல உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி தொடர்பாக விமர்சனம் செய்யும் அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடன் டெல்லி வந்து வலியுறுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement
[X] Close