[X] Close

"பேட்ஸ்மேன்கள் தேவை"-இந்திய அணி கோரிக்கை; மெளனம் காக்கும் பிசிசிஐ

விளையாட்டு

An-unresponsive-BCCI-leaves-Team-India-fretting-in-England

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரரான சுப்மன் கில், காயமடைந்துள்ளதால் அவருக்கு பதிலாக பிருத்விஷா மற்றும் மேலும் ஒரு பேட்ஸ்மேனை கேட்டு இந்திய அணி கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கு பதிலளிக்காமல் பிசிசிஐ தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது.


Advertisement

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி ஏற்கெனவே இங்கிலாந்து சென்றுவிட்டது. இதனிடையே, நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மோதியது. இதில் இந்தியா தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் - ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இதனையடுத்து இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரிலும் சுப்மன் கில் - ரோகித் சர்மா ஜோடியே களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

image


Advertisement

ஆனால் எதிர்பாராதவிதமாக சுப்மன் கில்லுக்கு பயிற்சியின்போது காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் 6 முதல் 8 வாரங்களுக்கு விளையாட முடியாது என கூறப்படுகிறது. இதனிடையே இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள் மற்றும் டி20 என தலா 3 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். மேலும் ராகுல்டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜூலை 13-ல் நடக்கிறது. இப்போது இலங்கை சென்று இருக்கும் இந்திய அணியில் பிருத்வி ஷா சேர்க்கப்பட்டுள்ளார்.

image

இங்கிலாந்தில் இருக்கும் சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இலங்கையில் இருக்கும் பிருத்வி ஷாவை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சேர்க்க இந்திய டெஸ்ட் அணி பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே மயாங்க் அகர்வால், கேஎல் ராகுல் ஆகியோர் இந்தியாவுக்கு தொடக்க வீரராக களமிறங்கியிருந்தாலும், பிருத்வி ஷாவையே டெஸ்ட் அணிக்கு தொடக்க வீரராக களமிறக்க விரும்புவதாக கூறப்படுகிறது. அவர் நல்ல பார்மில் இருப்பதால் கோலி அவரை விரும்புவதாக பிசிசிஐயிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும் நீண்ட நாள்கள் இங்கிலாந்தில் இருப்பதால் வேறு பேட்ஸ்மேனையும் பிசிசிஐயிடம் கேட்டுள்ளது.


Advertisement

இது குறித்து தேர்வாளர்கள் குழுத் தலைவர் சேத்தன் சர்மாவுக்கு இந்திய அணியின் மேலாளர் கிரிஷ் டோங்ரே ஜூன் 28-ஆம் தேதி இமெயில் அனுப்பியுள்ளார். ஆனால் இது குறித்து சேத்தன் சர்மாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இதனையடுத்து பிசிசிஐ தரப்பு மாற்று வீரர்களை அனுப்ப எவ்வித விருப்பமும் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் ஏற்கெனவே இங்கிலாந்து சென்று இருக்கும் அணியில் அபிமன்யூ ஈஸ்வரன், கே.எல்.ராகுல் ஆகியோர் இருப்பதால் இந்திய அணியின் இந்த கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்ததாகவே கூறப்படுகிறது. எனினும் முடியும் முடியாது என்ற விஷயத்தை தெரிவித்துவிட்டால் இந்திய அணி அடுத்து என்ன செய்வது என்பதை யோசிக்கும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

Advertisement
[X] Close