[X] Close

நீக்கப்பட்ட ஐடி சட்டப் பிரிவின் கீழ் தொடர்ந்து வழக்குகள் பதிவு: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

இந்தியா

supreme-court-said-it-was-shocking-that-cases-were-being-filed-under-the-deleted-Information-Technology-Act

ஆறு ஆண்டுகளுக்கு முன்பே நீக்கப்பட்டு விட்ட தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66 ஏ என்ற பிரிவின் கீழ் தொடர்ந்து வழக்குகள் பதியப்பட்டு வருவது அதிர்ச்சியை அளிப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


Advertisement

அவதூறாகவும் அரசுக்கு எதிராகவும் கருத்துக்களைப் பதிவிடுவோருக்கு, தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66 ஏ பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். சிவசேனா தலைவர் பால் தாக்கரே மறைவின்போது மும்பையில் நடத்தப்பட்ட முழு அடைப்புக்கு எதிராக கருத்து பதிவிட்ட சட்ட மாணவிகள் 2 பேர் மீது, 66 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் கருத்து சுதந்திரம் என்ற உரிமை மறுக்கப்படக்கூடாது என்று கூறி, 66 ஏ பிரிவையே நீக்கி 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி தீர்ப்பளித்தது. ஆனால் அந்தச் சட்டப்பிரிவின் கீழ் காவல்துறையினர் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து வருவது குறித்து, பொது சுதந்திரத்துக்கான மக்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2015 ஆம் ஆண்டே நீக்கப்பட்டதாக தீர்ப்பளிக்கப்பட்ட 66 ஏ சட்டப்பிரிவின் கீழ் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்படுவது அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டனர். இதுபற்றி 2 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close