[X] Close

போபால் : கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சாம்பலில் உருவாகி வரும் பூங்கா

இந்தியா,கொரோனா வைரஸ்

A-park-growing-in-the-ashes-of-corona-victims-in-the-crematorium-located-at-Bhopal-City-Madhya-Pradesh-State

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பட்பாதா விஸ்ரம் காட் பகுதியில் அமைந்துள்ள இடுகாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சாம்பலை பயன்படுத்தி பூங்கா ஒன்று உருவாகி வருகிறது. இரண்டாவது அலையில் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உயிரிழந்தவர்களின் சாம்பல் சுமார் 21 டிரக் இடுகாட்டில் இருப்பு உள்ளதாம். 


Advertisement

உயிர் நீத்தவர்களின் உறவினர்கள் எலும்புகளை மட்டுமே சேகரித்து சென்றதால் சாம்பல் அதிக அளவு இந்த இடுகாட்டில் உள்ள காரணத்தினால் அதனை கொண்டு 12000 சதுர அடியில் பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறதாம். 

“சுமார் 6000 பேரின் உடல் இந்த இடுகாட்டில் எரியூட்டப்பட்டது. சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு அந்த சாம்பலை கொண்டு பூங்கா அமைக்க உள்ளோம். மியாவாக்கி தொழில்நுட்பத்தில் இந்த சாம்பல் உடன் மண், எரு, மரத்தூள் மாதிரியானவற்றை பயன்படுத்தி சுமார் 4000 மரக்கன்றுகளை நடவு செய்ய உள்ளோம்” என இடுகாட்டை நிர்வகித்து வரும் கமிட்டி குழுவனினர் தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close