புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஊராட்சி மன்ற தலைவரும் 22 மோசடி வழக்குகளில் தொடர்புடைய பிரபல மோசடி மன்னன் வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களை கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பன்னீர்செல்வம். இவர், மீது இதுவரையில் 22 மோசடி வழக்குகள் உள்ள நிலையில், தனக்கு 100 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக 2.85 கோடி ரூபாயை முன்பணமாக பெற்றுக்கொண்டு பன்னீர்செல்வம் தன்னை ஏமாற்றி விட்டதாக கோயம்புத்தூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை உரிமையாளர் மாதேஸ்வரன் கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றப் பிரிவு உதவி ஆணையர் பார்த்திபன் தலைமையிலான 5 தனிப்படை போலீசார் நேற்று முதல் ஆலங்குடியில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீடு உள்ளிட்ட எட்டு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பன்னீர்செல்வத்தின் அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ள போலீசார் அவரை பிடிக்க 4 தனிப்படை அமைத்து அமைத்துள்ளனர். கடந்த இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் பன்னீர் செல்வத்தின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் அவர் பலரை ஏமாற்ற திட்டமிட்டு இருந்திருப்பதும் தெரியவந்திருப்பதாகவும் கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்