[X] Close

ஜப்பான்: அடாமி நிலச்சரிவில் சிக்கிய 80 பேரை கண்டறியும் பணி தீவிரம்

உலகம்

Rescuers-in-Japan-hunt-for-80-missing-after-deadly-landslides

ஜப்பானின் அடாமி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியிருப்பவர்களை மீட்க, 1,500 க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில், இதுவரை 80 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அடாமி பகுதி, கடலோர நகரம் என்பதால் நிலச்சரிவின் போது கடலில் அடித்து செல்லப்பட்டவர்களின் சடலமும் கிடைத்துவருகிறது.


Advertisement

அடாமி பகுதி, தென்மேற்கு டோக்கியோவிலிருந்து 90 கி.மீ. தொலைவிலுள்ளது. கடந்த ஒரு வாரமாக ஏற்பட்ட கனமழையால், நேற்று முன்தினம் அப்பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த நிலச்சரிவில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 130 கட்டடங்கள் அடித்துச்செல்லப்பட்டிருந்திருக்கிறது. இதில், இதுவரை 4 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளது.

Rescuers in Japan hunt for 80 missing after deadly landslides | Reuters


Advertisement

இன்னும் நிறைய பேர் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என கணிக்கப்பட்டு வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் யோஷிஹைட் சுகா, “இன்னும் நிறைய பேரை நாம் காப்பாற்ற வேண்டியுள்ளது. பலர் உள்ளே சிக்கிக்கொண்டிருக்க வாய்ப்புள்ளது. எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ, அவ்வளவு சீக்கிரம் அவர்களை நாம் காப்பாற்றியாக வேண்டும்.

ஜப்பானின் பல பகுதிகளில் ஒரு வாரமாகவே பலத்த மழை பெய்கிறது. வெந்நீர் ஊற்றுகள் நிறைந்த அடாமி, கடலோரத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலம் என்பதால், அங்கு மக்கள் வருகை எப்போதும் இருந்துக்கொண்டே இருக்கும். சுற்றுலாத்தல பகுதியான இங்கு, அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதும் உண்டு.

Rescuers in Japan hunt for 80 missing following deadly landslides | The  Independent


Advertisement

நேற்று முன்தினம் அரசுத் தரப்பில் நிலச்சரிவுக்கான முன்னெச்சரிக்கை அப்பகுதியில் விடுக்கப்பட்டிருந்தது. பலர் அப்போதே பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டனர். இன்னும் சிலர் அந்தப் பகுதியில் வசித்தனர். அவர்களில்தான் சிலர் தற்போது நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்கள், கடலோர காவல் படையினர் மற்றும் பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்” என்று கூறினார்.

தற்போது அடாமியில் மழை விட்டிருந்தாலும்கூட, முன்கணிப்புகளின்படி இன்னும்கூட நிறைய இடங்களில் நிலச்சரிவு ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே மீட்பு பணிகள் யாவும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.


Advertisement

Advertisement
[X] Close