[X] Close

மத்திய அமைச்சர் செகாவத்தை சந்திக்கிறார் துரைமுருகன் - முக்கியத்துவம் பெறும் டெல்லிப் பயணம்

தமிழ்நாடு,வீடியோ ஸ்டோரி

மேகதாது அணை கட்டுவதை ஏற்க முடியாது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ள நிலையில், தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.


Advertisement

கர்நாடகாவுடன் காவிரி, தென்பெண்ணை ஆறுகள், கேரளாவுடன் முல்லைப் பெரியாறு அணை என தமிழகத்தின் நதிநீர் பிரச்னைகள் தீர்வே இல்லோமல் சென்று கொண்டிருக்கின்றன. காவிரியில் கர்நாடகம் நீர் திறப்பதை மேலாண்மை ஆணையம் உறுதி செய்திருந்தாலும், மாதந்தோறும் வழங்கும் நீரை கர்நாடகம் திறந்துவிடுவதில்லை. இதுதவிர தமிழகத்துக்கு நீர் திறந்துவிடுவதை தடுக்கும் நோக்கிலே மேகதாதுவில், கர்நாடகம் அணை கட்ட முயற்சிக்கிறது. அணைக்கு ஒப்புதல் கேட்டு கர்நாடக முதலைச்சர் எடியூரப்பா எழுதிய கடிதத்துக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்த சூழலில் டெல்லி செல்லும் தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் திங்கள்கிழமை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செக்காவத்தை சந்தித்துப் பேசுகிறார். அப்போது மேகதாது அணை விவகாரம் முக்கிய இடம்பெறும் எனத் தெரிகிறது.

மேலும், மார்கண்டேய நதியில் கர்நாடகம் அணை கட்டியது குறித்தும் ஆலோசிப்பார் எனக் கூறப்படுகிறது. இதுதவிர, முல்லைப்பெரியாறு அணை விவகாரம் குறித்தும் துரைமுருகன் மத்திய அமைச்சருடன் விவாதிப்பார் எனத் தெரிகிறது. மேலும், நதிநீர் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த மனுவையும் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வழங்குவார் எனத் தெரிகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close