[X] Close

தெலங்கானாவில் சாலை விபத்து : அதிவேகத்தால் பறிபோன 3 உயிர்கள்

இந்தியா

Telangana-State-3-lives-lost-due-to-high-speed-in-Accident

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கட்டுப்பாடு இல்லாமல் தறிகெட்டு ஓடிய இருசக்கர வாகனம் திடீரென சாலையில் வழுக்கி விழுந்ததில், பின்னால் வந்த சிமெண்ட் லாரியின் சக்கரத்தில் சிக்கி இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரும் உயிரிழந்தனர். நெஞ்சை பதற வைக்கும் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். 

அண்மையில் இதே போல் கட்டுப்பாடு இல்லாமல் வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று முன்னால் சென்றுக் கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியதில், பயணி ஒருவர் உயிரிழந்தார். கட்டுப்பாடு இல்லாத வேகம் காரணமாக ஹைதராபாத்தில் விபத்துகள் அதிகரித்து வருவது, அந்நகர மக்களை கவலை அடைய வைத்துள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close