[X] Close

சென்னை : வீட்டின் வெளியே உறங்கி கொண்டிருந்த ரவுடியின் மாமனார் சரமாரியாக வெட்டிக் கொலை

குற்றம்,தமிழ்நாடு

Rowdy-s-father-in-law-who-was-sleeping-outside-the-house-was-hacked-to-death-by-Goons-in-Chennai-Tamil-Nadu

சென்னையில் வீட்டின் வெளியே உறங்கி கொண்டிருந்த ரவுடியின் மாமனார் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் வேலு என்கிற பாண்டி வேலு. 45 வயதான இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னை துரைப்பாக்கம், நீலாங்கரை போன்ற பகுதியில் மாநகராட்சி சார்பில் கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் நேற்று இரவு வீட்டின் வெளியே உறங்கி கொண்டிருந்தார். 

இந்நிலையில் அதிகாலை நேரத்தில் 4 பேர் கொண்ட கும்பல் உறங்கி கொண்டிருந்த வேலுவை சரமாரியாக தலை மற்றும் இடுப்பு பகுதியில் வெட்டியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, இரத்த வெள்ளத்தில் இருந்த வேலுவை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு வேலு உயிரிழந்தது தெரியவந்தது.


Advertisement

image

பின்னர் இச்சம்பவம் குறித்து செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து போலீசார் அவரது உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வேலுவின் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டதில் வேலுவின் மருமகன் கொட்டைசப்பி சுரேஷ் என்பவர் கொலை மற்றும் வழிப்பறி போன்ற குற்றச்சம்பவகளில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. அவரை கொலை செய்யும் நோக்கில் கொலையாளிகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதும் அவர் அங்கு இல்லாததால் ஆதிரத்தில் வேலுவை வெட்டி கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. 


Advertisement


Advertisement

Advertisement
[X] Close