Published : 04,Jul 2021 12:00 PM

சடலத்தை தூக்கிச் செல்ல மறுத்த மருத்துவமனை ஊழியர்கள்: மனைவியின் உடலை சுமந்து சென்ற கணவர்

ஒடிசாவில் உயிரிழந்த மனைவியின் சடலத்தை அவரது கணவரே தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றிய சம்பவம் தொடர்பாக, மருத்துவமனை ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கந்தமால் மாவட்டத்தில் பழங்குடியினரான பாலகிருஷ்ணா என்பவரது மனைவி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். மருத்துவமனை வார்டிலிருந்து வாகனத்திற்கு அவரது உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனை ஊழியர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால் வேறுவழியின்றி பாலகிருஷ்ணன் தனது மனைவியை தூக்கிச் சென்றார்.

இதையடுத்து அவரது தந்தையின் உதவியுடன், அங்கிருந்த ஸ்ட்ரெச்சரில் மனைவியின் உடலை ஏற்றி வாகனத்திற்கு கொண்டு வந்தார்.. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில், மருத்துவமனை ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்