ஹர்பஜன் சிங்கின் ’பிரண்ஷிப்’ படத்தில் நடிப்பதோடு பாடகியாகவும் அறிமுகமாகியுள்ளார் நடிகை லாஸ்லியா.
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதன்முறையாக ஹீரோவாக தமிழில் ’பிரண்ட்ஷிப்’ படத்தில் அறிமுகமாகியுள்ளார். ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் ஹர்பஜன் சிங், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் கவனம் ஈர்த்த லாஸ்லியா ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் கவனம் ஈர்த்த நிலையில், நடிகை லாஸ்லியா இப்படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். இன்று ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளையொட்டி் முதல் பாடலாக வெளிவந்துள்ள ‘அடிச்சு பறக்கவிடுமா’ பாடலை இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து பாடியிருக்கிறார் லாஸ்லியா. ’சென்னை சூப்பர் கிங்ஸ்’ கிரி்க்கெட் அணியின் ப்ரொமோ பாடல் போலவே இருக்கும், இப்பாடலை கிழித்து தெறிக்க விட்டிருக்கிறார்கள் தேவாவும் லாஸ்லியாவும்.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!