[X] Close

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்?

இந்தியா

PM-modi-Mega-Cabinet-Expansion-Coming-Soon
மத்திய அமைச்சரவையில் தற்போது 53 அமைச்சர்கள் உள்ளனர். அமைச்சரவையில் 81 அமைச்சர்கள் வரை இடம் பெற முடியும். இதனடிப்படையில் இன்னும் 28 பேர் வரை அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு, கடந்த 2019-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பதவி ஏற்றது. அதன் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்வது தொடர்பாக பிரதமர் மோடி கடந்த மாதம் பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் உடன் 2 முறை ஆலோசனை நடத்தினார். இதனால், எந்த நேரத்திலும் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் பற்றிய அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாத அமைச்சர்கள் பதவி இழக்க நேரிடலாம் என்றும் அமைச்சரவை விரிவாக்கத்தில் பல புதிய முகங்களுக்கும், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Advertisement
[X] Close