Published : 01,Jul 2021 09:21 PM

கொரோனா பேரிடருக்கு மத்தியில் சம்பள உயர்வு பெற்ற ஐடி நிறுவன தலைமை செயல் அதிகாரிகள்

Mid-Sized-IT-Firm-CEO-s-got-hike-in-their-salary-amid-COVID19-Hit-Pandemic

உலகத்தையே ஆட்டிப் படைத்து வருகிறது கொரோனா பெருந்தொற்று நோய். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் உயிரை இழந்து வரும் வேளையில் பாதிக்கப்படாத சிலர் தங்களது வாழ்வாதாரத்தையே இழந்துள்ளனர். இந்த பேரிடருக்கு மத்தியில் சம்பள உயர்வு பெற்றுள்ளனர் நடுத்தர ஐடி நிறுவன தலைமை செயல் அதிகாரிகள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் மூலம் தங்களது வணிக வாய்ப்பை பெருக்கி கொண்டதன் மூலம் இந்த சம்பள உயர்வு அவர்களுக்கு சாத்தியமாகி உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. 

எக்கனாமிக் டைம்ஸின் அறிக்கையின்படி L&T இன்போ டேக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் ஜலோனா 2020 - 21 ஆண்டில் மட்டும் தனது ஆண்டு வருவாயில் 29 சதவிகிதம் கூடுதலாக கூட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இகே போல மைண்ட் ட்ரீ மற்றும் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம் மாதிரியான நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளின் ஊதியமும் பன்மடங்கு கூடி உள்ளதாம். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்