Published : 01,Jul 2021 05:22 PM

நடனம் ஆடும் பெண்ணை ரசித்து ஊக்கப்படுத்தும் நாய்: வைரல் வீடியோ

Dog-Encouraging-Dancing-Girl--Viral-Video

பெண்ணின் நடனத்தை சங்கிலியில் கட்டப்பட்ட நாய் ஒன்று ரசித்து உற்சாகப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நான்கு கால்களாலும் நடக்கும் நாய் இரண்டு கால்களால் நிற்பது அரிது. வளர்க்கப்படும் நாய்களும், காவல்துறை நாய்களில் சில நாய்கள் மட்டும் இரண்டு கால்களால் நின்று மனிதர்களை அணைத்து பாசத்தை வெளிப்படுத்தும். அப்படி, பயிற்சியளிக்கப்பட்ட வளர்க்கும் நாய் ஒன்று நடனமாடும் பெண்ணை மனிதர்கள் போல் நின்று  கால்களைத் தட்டித் தட்டி ரசித்து உற்சாகப்படுத்துகிறது.

ஸ்ரீஜித் திரிக்காரா என்பவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ள வீடியோவில், சுடிதாரில் இருக்கும் இளம்பெண் அழகாக பரதநாட்டியம் ஆட அதனை சங்கிலியில் கட்டப்பட்டிருக்கும் நாய் பெண் ஆடுவதுபோலவே செய்து இரு கால்களையும் தட்டி ரசிக்கிறது. நாயின் இந்த க்யூட் எக்ஸ்பிரஷன்  வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்