[X] Close

ஹைதராபாத்: 39 வயதாகியும் திருமணம் நடக்காததால் விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

இந்தியா

39-year-old-Man-committed-suicide-after-failing-to-get-married-at-Hyderabad

ஹைதராபாத்தில் 39 வயதாகியும் திருமணம் நடக்காததால் விரக்தியில் பொற்கொல்லர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் சாரி. 39 வயதான இவர் பொற்கொல்லராக வேலை செய்து வந்துள்ளார். வேலை செய்யும் இடத்திற்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கிவந்த இவர், செவ்வாய்க்கிழமை இரவு தெளிவற்ற நிலையில் வீட்டிற்கு வந்திருக்கிறார். அவரால் நடக்க முடியாததால் வீட்டின் உரிமையாளர் அவருக்கு உதவியிருக்கிறார்.

வீட்டிற்குச் சென்ற சாரி, அன்றிரவு தனது சகோதரிக்கு செல்போனில் அழைத்துப் பேசியிருக்கிறார். அவர் தற்கொலை செய்துபோவதாகக் கூறியதைக் கேட்டு பதற்றமடைந்த சாரியின் சகோதரி அப்போதே கிளம்பி சாரியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு சென்று பார்த்தபோது சாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்திருக்கிறது. உடனே வீட்டின் உரிமையாளரை அழைத்துக் கூறியிருக்கிறார்.


Advertisement

போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதன்பேரில், முஷீராபாத் காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றிருக்கின்றனர். ஆனால் அங்கு தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. 39 வயதாகியும் தனக்கு திருமணம் நடக்காததால் விரக்தியில் உள்ளதாக அவர் செல்போனில் கூறியபிறகு தற்கொலை செய்துள்ளார் என அவருடைய சகோதரி வாக்குமூலம் கொடுத்ததை அடுத்து, உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

கவனிக்க....

மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


Advertisement

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


Advertisement

Advertisement
[X] Close