சொத்து முடக்கம்....நாளைக்குள் விளக்கம் அளிப்பேன்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சொத்து முடக்கம்....நாளைக்குள் விளக்கம் அளிப்பேன்: அமைச்சர் விஜயபாஸ்கர்
சொத்து முடக்கம்....நாளைக்குள் விளக்கம் அளிப்பேன்: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சொத்துகள் முடக்கப்பட்டது தொடர்பாக நாளைக்குள் விளக்கம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய அவர், நீட் தேர்விலிருந்து இந்தாண்டு விலக்கு அளிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியிருப்பதாகவும் கூறினார்.

முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசலில் இருக்கும் விஜயபாஸ்கரின் குவாரி மற்றும் 100 ஏக்கர் நிலத்தை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. மத்திய பொதுப்பணித்துறையினர் ஆளில்லா விமானம் மூலம் நடத்திய ஆய்வில் குவாரியில் அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகவும் அதன் மூலம் கிடைத்த வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்றும் வருமான வரித்துறை கூறியிருந்தது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com