[X] Close

தெலங்கானா : சொகுசு கார் மோதி தூக்கி வீசப்பட்ட ஆட்டோ : ஒருவர் உயிரிழப்பு

இந்தியா

Luxurious-car-collide-and-tossed-auto-rickshaw-and-the-passenger-who-travelled-in-auto-was-dead-in-an-Accident-in-Telangana-state-of-India

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அதிவேகமாக வந்த சொகுசு கார், முன்னால் சென்றுக் கொண்டிருந்த ஆட்டோவை தூக்கி வீசிய நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

ஹைதராபாத் நகரில் கடந்த 27 ஆம் தேதி இரவு மழை பெய்துக் கொண்டிருந்த நிலையில், வாடகை ஆட்டோ ஒன்று மெல்ல சென்றுக் கொண்டிருந்தது. அப்போது பின்னால் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று, கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்த ஆட்டோவை இடித்து தள்ளிவிட்டு பறந்தது. ஆட்டோ தூக்கி வீசப்பட்டதில் அதில் அமர்ந்திருந்த பயணி பரிதாபமாக உயிரிழந்தார்.

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த காணொலி வெளியான நிலையில், அதிவேகமாக சொகுசு காரை ஓட்டி வந்தவர், அவரது தந்தை என 3 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் மதுபோதையில் அவர்கள் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close