
தேசிய அளவிலான கிராப்ளிங் போட்டியில் 2 பதக்கங்களை வென்ற தங்கச்சிமடம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மாணவி பூவினமாரிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அவர் பயின்று வரும் அரசு பள்ளி சார்பில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஏழை மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த பூவினமாரி, டெல்லியில் நடைபெற்ற தேசிய கிராப்ளிங் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
பாராட்டு விழாவில் பேசிய பூவினமாரி, பெற்றோர் அளித்த ஊக்கத்தால், ஏழ்மையைத் தாண்டி சாதிக்க முடிந்ததாகக் கூறினார். அடுத்த தொடரில் தங்கம் வென்று, உலகச் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.