[X] Close

பெண் மென்பொறியாளரை கொலை செய்து சூட்கேசில் எடுத்துச் சென்று எரித்த காதல் கணவன் கைது

இந்தியா,குற்றம்

Andhra-Pradesh--Husband-arrested-for-killing-wife-and-burning-in-forest

காதலித்து திருமணம் செய்த மென்பொருள் பொறியாளர் மனைவியை கொலை செய்து எரித்த கணவர் கைது செய்யப்பட்டார்.


Advertisement

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூர் அடுத்த ராமசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. மென்பொருள் பொறியாளரான இவர், ஹைதராபாதில் பணிபுரிந்து வந்தார். அப்போது ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து ஸ்ரீகாந்தும் புவனேஸ்வரியும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

image


Advertisement

இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்த் புவனேஸ்வரி தம்பதியினர் திருப்பதிக்கு குடிபெயர்ந்தனர். இதையடுத்து திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள வனப்பகுதியில் முழுவதும் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பதி அலிபிரி போலீசார் அங்கு நடத்தப்பட்ட தடவியல் சோதனையில் எரியாத நிலையில் இருந்த தலை முடியை வைத்து அது பெண் உடல் என அடையாளம் காணப்பட்டது.

இதனை வைத்து சுற்றுப்பகுதியில் உள்ள காணாமல் போன பெண்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர். இதில், அலிபிரி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் புவனேஸ்வரி கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதனை வைத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அனைத்தையும் சோதனை செய்தபோது ஸ்ரீகாந்த் புவனேஸ்வரியை வீட்டில் வைத்து கொலை செய்து சடலத்தை சூட்கேசில் வைத்து ரூயா அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள வனப்பகுதியில் வைத்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

image


Advertisement

இந்த சம்பவங்கள் அனைத்தையும் தனது ஒன்றரை வயது குழந்தையை உடன் வைத்துக்கொண்டே ஸ்ரீகாந்த் செய்தது சிசிடிவி கேமரா காட்சிகளின் ஆதாரமாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஸ்ரீகாந்தை அலிபிரி போலீசார் விஜயவாடாவில் உள்ள ஒரு லாட்ஜில் குழந்தையுடன் தங்கியிருந்த போது நேற்று மாலை கைதுசெய்து திருப்பதிக்கு இன்று அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்திடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close