[X] Close

சீனாவின் 'கொரோனாவேக்' தடுப்பூசி 3 - 17 வயதினருக்கு பாதுகாப்பானது: ஆய்வுகளில் முடிவு

சிறப்புக் களம்,கொரோனா வைரஸ்

New-research--Chinese-vaccine-CoronaVac-found-safe--effective-in-kids--adolescents

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தடுப்பூசியான 'கொரோனாவேக் தடுப்பூசி' மீதான ஆய்வுகள், லேன்செட் மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது. அதில், இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்றும், 3 -17 வயதினருக்கும் இந்த தடுப்பூசியினால் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு திறன் போதிய அளவு கிடைக்குமென்றும் உறுதியாகியுள்ளது.


Advertisement

550 இளையோர் உள்ளடங்கிய இந்த ஆய்வில், இரண்டு டோஸ் எடுத்துக்கொண்ட குழந்தைகள் - வளரிளம் பருவத்தினருக்கான குழுவில், 96% பேருக்கு உடலில் கொரோனாவுக்கு எதிரான தடுப்புத் திறன் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட பின், லேசான அல்லது மிதமான சில பக்கவிளைவுகளும், ஊசி போட்ட இடத்தில் வலி எடுப்பது மட்டுமே அறிகுறிகளாக தெரியவந்துள்ளது.

China authorises CoronaVac COVID-19 vaccine for children above 3 years -  The Economic Times


Advertisement

அக்டோபர் மற்றும் டிசம்பர் 2020 மாதங்களுக்குள் இந்த தடுப்பூசி மீது, இரண்டு கட்ட சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளது. இதில், முதற்கட்ட சோதனையில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் 1.5 மற்றும் 3 மைக்ரோகிராம் கொண்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. முடிவில், அனைவருக்குமே கொரோனாவுக்கான நோய் எதிர்ப்புத்திறன் கிடைத்துவிட்டது. இருப்பினும், 3 மைக்ரோகிராம் டோஸ் செலுத்திக்கொண்டோருக்கு, நோய் எதிர்ப்பு திறன் வலுவாக கிடைத்துள்ளது. இரண்டாம் கட்ட சோதனையில், 1.5 மைக்ரோகிராம் செலுத்திக்கொண்டோரில் 97% பேருக்கும் - 3 மைக்ரோகிராம் செலுத்திக்கொண்டோரில் 100% பேருக்கும் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் உருவானது தெரியவந்துள்ளது.

Coronavirus: China Authorises CoronaVac COVID-19 Vaccine For Children Above  3 Years

இந்த 'கொரோனாவேக்' தடுப்பூசியை உற்பத்தி செய்யும் 'சினோவேக்' நிறுவனத்தை சேர்ந்த கியாங் அளித்த தகவலின்படி, “எங்கள் ஆய்வில், கொரோனாவேக் மிகச்சிறந்த நோய் எதிர்ப்புத்திறனை உருவாக்குகிறது என தெரியவந்துள்ளது. இப்போதைக்கு எங்கள் நிலப்பரப்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு இடங்களில், இன்னும் அதிக நபர்களுக்கு மத்தியில், வெவ்வேறு தரப்பினருக்கு இது செய்யப்பட வேண்டுமென எதிர்ப்பார்க்கிறோம். அதன்மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்புத்திறன் பற்றிய தகவல்கள், குழந்தைகள் – வளரிளம் பருவத்தினருக்கான தடுப்பூசி விநியோகத்தில் கூடுதல் தெளிவை தரும்” என நம்பிக்கை அளித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close