[X] Close

திருச்சி: பிரபல ரவுடி கொன்று புதைப்பு; அதிர வைக்கும் காரணம்

குற்றம்,தமிழ்நாடு

Rowdy-Naveenkumar-who-is-believed-to-be-missing-in-Srirangam-has-been-found-murdered-and-buried-and-5-people-have-been-arrested-in-connection-with-the-murder
ஸ்ரீரங்கத்தில் காணாமல் போனதாக கருதப்பட்ட ரவுடி நவீன்குமார் என்பவர் கொன்று புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, கொலை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சங்கர்நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி நவீன்குமார். பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய இவர் கடந்த 8-ஆம் தேதி இவரது நண்பர்களுடன் கொள்ளிட கரையில் மது அருந்தியதாக தெரிகிறது. அதன் பிறகு அவரை காணவில்லை. எனவே  தனது மகனை கண்டுபிடித்து தருமாறு தந்தை, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி போலீசார் விசாரணையை தொடங்கினர். அவருடன் நெருக்கமாக இருந்த ஏழுக்கும் மேற்பட்டவர்களை விசாரணை வளையத்தில் கொண்டு வந்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தநிலையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. நேற்று மீண்டும் தீவிர விசாரணையை தொடங்கிய நிலையில் கடந்த 8ஆம் தேதி இவர்கள் அனைவரும் மது அருந்தும்போது நவீனுக்கும் மற்ற நண்பர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அடித்துக் கொன்று கொள்ளிடக் கரையில் புதைத்துள்ளது தெரியவந்தது.
கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் கேட்டபோது, இவர்களுடன் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் மனைவிகளை தொடர்ந்து மிரட்டி அவர்களுடன் உறவு வைத்துக் கொண்டதால் அதனை தட்டிக் கேட்டும் அவர் தொடர்ந்து மிரட்டியதால் கொலை செய்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் மகேந்திரன் முன்பு இன்று காவல்துறையினர் அவர் உடலை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். உடனே அங்கேயே பிரேத பரிசோதனை செய்துவிட்டு அடையாளம் காணப்பட்டது. 
இதில் ஒரு ரவுடி வீட்டு விசேஷத்திற்காக பார்ட்டி வைப்பதாக அவரை கொள்ளிட கரைக்கு அழைத்து கொலை சம்பவத்தை நிகழ்த்தியது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் சங்கர், கோயிபிள்ளை, சந்திரமோகன், மணிமாறன், விஜயகுமார் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement
[X] Close