[X] Close

அண்ணா சாலையில் விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து: ஓட்டுநர் உட்பட 9 பேர் காயம்

Government-bus-with-accident-on-Anna-road--9-people-including-driver

சென்னை மாநகரப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் படுகாயமடைந்தார். மேலும் 8 பயணிகள் காயமடைந்தனர்.

அண்ணா சாலையில் சென்றுகொண்டிருந்த மாநகரப் பேருந்து, ஸ்பென்சர் அருகே வழிகாட்டும் பலகை மீது மோதியது. இதில் ஓட்டுநர் படுகாயமடைந்தார். கண்ணாடிகள் நொறுங்கியதில் பயணிகள் 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பேருந்து விபத்து காரணமாக அண்ணா சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து விபத்துக்குள்ளான பேருந்தை போக்குவரத்து காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close