Published : 03,Aug 2017 07:23 AM

காணாமல் போன மாணவிகள்: ரயில்வே தண்டவாளத்திலிருந்து சடலமாக மீட்பு

Disappeared-Students--Recovery-from-Railway

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காணாமல் போன 10 ஆம் வகுப்பு மாணவிகள் இருவரின் உடல்கள் ரயில்வே தண்டவாளத்திலிருந்து மீட்கப்பட்டன.

வையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் செல்வி, ரதிதேவி ஆகியோர் 10 ஆம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று பள்ளி முடிந்து மாணவிகள் வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து தேடிவந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை எடக்காட்டனூர் ரயில்வே தண்டவாளத்தில் மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டன. மாணவி ரதிதேவியின் பள்ளி பையிலிருந்து ரயில்வே காவல்துறையினர் கடிதம் ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர். அதில், என்ன எழுதியுள்ளது என்பது குறித்த விவரம் இன்னும் தெரியவரவில்லை. சம்பவ இடத்தில் திருச்சி மாவட்ட ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஆனிவிஜயா விசாரணை மேற்கொண்டார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்