Published : 03,Aug 2017 07:16 AM

சசிகலாவிடம் ஆலோசனை பெற்ற வழக்கு: முதல்வர் உட்பட 5 அமைச்சர்களுக்கு நோட்டீஸ்

Advocate-to-Sasikala--Five-Ministers--including-Chief-Minister

சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவிடம் ஆலோசனை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 5 அமைச்சர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் ஆணழகன் என்பவர் தொடர்ந்திருந்த பொதுநல மனு, நீதிபதிகள் கே.கே சசிதரன், ஜி.ஆர் சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பதவியேற்பின்போது ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை மீறி, அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், காமராஜ் ஆகியோர் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுவரும் சசிகலாவை சிறையில் சந்தித்து ஆலோசனை பெற்றதாகவும், இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டிக்கத் தவறியதாகவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. எனவே முதலமைச்சர் மற்றும் 4 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

வாதத்தைக் கேட்டறிந்த நீதிபதிகள், இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், காமராஜ் ஆகியோர் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்