[X] Close

என் இறப்புக்கு கணவன் குடும்பமே காரணம்: கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்

குற்றம்,தமிழ்நாடு

My-husband-s-family-was-responsible-for-my-death-the-woman-who-committed-suicide-after-writing-the-letter

புதுப்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் மாமியார் உட்பட 3 பேரை திருமுல்லைவாயல் போலீசார் கைது செய்தனர்.


Advertisement

சென்னை, கே.கே நகர், எம்ஜிஆர் நகர், தந்தை பெரியார் தெருவை சேர்ந்தவர் ஜோதிஸ்ரீ (19). பி.காம் பட்டதாரியான இவருக்கும், ஆவடி அருகே திருமுல்லைவாயல், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த பாலமுருகன் (29) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு பாலமுருகன் அவரது தாயார் அம்சாவும் சேர்ந்து, 'கடன் வாங்கி வீட்டை வாங்கியுள்ளோம். எனவே, எங்களுக்கு பணம் தேவைப்படுகிறது. உனது பெற்றோரிடம் சென்று பணம் வாங்கிக் கொடு' எனக் கூறி கொடுமைப்படுத்தி உள்ளனர்.

image


Advertisement

இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் இறுதியில், ஜோதிஸ்ரீ பாலமுருகனை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் அடைக்கலம் ஆனார். இந்நிலையில், ஏப்ரல் 4-ம் தேதி ஜோதிஸ்ரீ திருமுல்லைவாயலில் உள்ள கணவர் பாலமுருகன் வீட்டுக்கு மீண்டும் வந்தார். அப்போது மாமியார் அம்சா அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து ஜோதிஸ்ரீ வீட்டின் முதல் மாடிக்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த அம்சா, அறைக்கு செல்லும் மின் வயரை துண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜோதிஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் அடிப்படையில் ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஜோதிஸ்ரீ செல்போனில் ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார். மேலும், அவர் உருக்கமாக எழுதியிருந்த கடிதமும் சிக்கியது. அதில், எனது சாவுக்கு கணவர் பாலமுருகனும், மாமியார் அம்சா மற்றும் குடும்பத்தினர் தான் காரணம் என கூறியிருந்தார். அதேபோல் தமது தற்கொலைக்கு காரணமான தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை விட வேண்டாம் என  உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

image


Advertisement

இந்நிலையில் ஜோதிஸ்ரீ தற்கொலைக்கு அவரது கணவர் பாலமுருகன் (29), மாமியார் அம்சா (65), பாலமுருகனின் அண்ணன் சத்யராஜ் (35) ஆகியோர் காரணம் என திருவள்ளூர் ஆர்.டி.ஓ விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து, அவர் உத்தரவுவின் பேரில் திருமுல்லைவாயல் போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Advertisement

Advertisement
[X] Close