
நடிகை த்ரிஷா பாக்சிங் பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது, 96, ஹே ஜுட், சதுரங்க வேட்டை-2 எனப் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் த்ரிஷா, உடற்பயிற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில், தற்போது பாக்சிங் பயிற்சி எடுத்து வரும் த்ரிஷா, அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ட்விட்டர் பக்கத்திலும் பதிவேற்றியுள்ளார். மேலும், பாக்சிங்கை ‘my current love’ எனவும் த்ரிஷா குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் ‘நீ என்னை அடிக்கும் படி கனவு கண்டால் கூட, விழிக்கும்போது என்னிடம் மன்னிப்பு கேட்டு கொண்டு தான் எழுவாய்.. நான் அவ்வளவு பலசாலியானவள்’ எனப் பதிவிட்டுள்ளார்.