[X] Close

பெங்களூரு: நள்ளிரவில் பிரியாணி இல்லையென்று சொன்ன உணவக ஊழியருக்கு கத்திக்குத்து

குற்றம்

Bengaluru--Restaurant-cashier-stabbed--cook-assaulted-after-refusing-to-sell-biryani-late-at-night

பெங்களூருவில் இரவு 12 மணிக்கு பிரியாணி பார்சல் தராத உணவக ஊழியரை, இரண்டு நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.


Advertisement

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், பிரியாணி இல்லை எனக்3 கூறிய 27 வயது உணவக ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார், சமையல்காரரும் தாக்கப்பட்டார். குற்றம்சாட்டப்பட்ட சிவா மற்றும் பவன் ஆகிய இரண்டு பேரும் இரவு 12 மணிக்கு மேலாக ஹோட்டலுக்கு சென்று பிரியாணி பார்சல் கேட்டுள்ளனர். இரவு நேரமானதால் உணவக ஊழியர்கள் பிரியாணி இல்லை எனக் கூறியதால் கோபமடைந்த அவர்கள், மோசமான விளைவுகள் ஏற்படும் என மிரட்டியுள்ளனர்.

அதன்பின்னர், இரவு 1 மணிக்கு மேலாக உணவகத்தை மூடிவிட்டு அம்ருத்தஹள்ளி பிரதான சாலையில் உணவக காசாளர் குருபிரசாத் மற்றும் சமையல்காரர் உஸ்மான் இருவரும் நடந்துசென்றபோது, பவன் மற்றும் சிவா ஆகியோர் அப்பகுதி சந்தைக்கு அருகில் காத்திருந்து குருபிரசாத்தை கத்தியால் குத்தியுள்ளனர், உஸ்மானையும் தாக்கியுள்ளார்கள்.


Advertisement

கத்தியால் குத்தப்பட்ட குருபிரசாத் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close