
சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் அணைக்கட்டில் கரைபுண்டு ஓடிய வெள்ளத்தில் சிக்கிய ஒருவர் தன்னை மீட்கும் படி அபாயக் குரல் எழுப்பினார்.
இதையடுத்து அங்கு விரைந்த பேரிடர் மீட்பு படையினர் கிராம மக்களின் உதவியோடு மனித சங்கிலியாக நின்று அவரை பாதுகாப்பாக மீட்டு கரை சேர்த்தனர். இந்தக் காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ்வடையச் செய்தது.