Published : 24,Jun 2021 07:18 PM

அணிவகுக்கும் பாலிவுட் வாய்ப்புகள்... மும்பைக்கு குடிபெயர்ந்த ராஷ்மிகா!

Rashmika-Mandanna-moves-into-Mumbai

பாலிவுட்டில் தொடர் வாய்ப்புகள் அணிவகுப்பதால், பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா மும்பையில் குடியிருப்பு ஒன்றை வாங்கி, அங்கு குடிபெயர்ந்துள்ளார்.

'கீதா கோவிந்தம்' என்ற ஒரே படத்தில் புகழின் உச்சாணிக் கொம்பில் சஞ்சரித்தார் ராஷ்மிகா. தெலுங்கு நடிகையாக இருந்தாலும், இந்தப் படத்தில் இடம்பெற்ற 'இன்கேம் இன்கேம்' பாடல் மூலம் தமிழ்நாட்டிலும் மிகவும் பரிச்சயமானவர் நடிகை ராஷ்மிகா. அவரது நடிப்பாலும், க்யூட் எக்ஸ்பிரஷன்களாலும் தெனிந்தியா முழுவதும் பல ரசிகர்களைக் கொண்டுள்ளார். சமீபத்தில் கார்த்தியின் 'சுல்தான்' படத்திலும் நடித்து கவனம் ஈர்த்தார்.

Sulthan: Rashmika Mandanna Trends on Twitter After Karthi Starrer Hits Theatres, Fans Go Beserk to See the Actress on Big Screen - ZEE5 News

தமிழ், தெலுங்கை போல ராஷ்மிகாவுக்கு பாலிவுட் சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 'மிஷன் மஜ்னு' மூலம் விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ள நடிகை ராஷ்மிகா, தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் வகையில் சமீபத்தில் மும்பையில் வாங்கிய தனது குடியிருப்பு இடம்பெயர்ந்துள்ளார். இதையடுத்து புது வீட்டுக்கு குடிபெயர்ந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் பகிர்ந்துகொண்டார். கூடவே, புது வீட்டுக்கு குடிபெயர்ந்த அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார் அவர்.

பாலிவுட்டின் பிரபல விளம்பரத் தயாரிப்பாளர் சாந்தனு பாக்சி முதல்முறையாக இயக்கும் படம்தான் 'மிஷன் மஜ்னு'. ஸ்பை த்ரில்லர் பாணியில் எடுக்க இருக்கும் இந்த திரைப்படத்தின் கதையை பர்வீஸ் ஷேக், அசீம் அரோரா மற்றும் சுமித் பதேஜா என்ற மூவர் சேர்ந்து எழுதியுள்ளனர். இந்த திரைப்படம் 1970-களில் நடந்த உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையிலான தூதரக உறவை பாதித்த ஒரு மிஷனை அடிப்படையாக கொண்டு கதை எழுதப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

Rashmika Mandanna celebrates birthday with Amitabh Bachchan on Goodbye sets - Movies News

இந்தப் படம் மட்டுமில்லை. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் வரவிருக்கும் திரைப்படமான 'குட்பை'. இதிலும், அமிதாப் பச்சனுடன் ராஷ்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இப்படி அடுத்தடுத்து பாலிவுட் திரைப்படங்கள் வர தற்போது மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளார். இதுபோக, தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாக்கி வரும் 'புஷ்பா' படத்திலும் ராஷ்மிகா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்