[X] Close

நியூசிலாந்து கிரிக்கெட்டின் ‘கேப்டன் கூல்’ - வரலாற்றுச் சாதனை படைத்த கேன் வில்லியம்சன்!

விளையாட்டு,சிறப்புக் களம்

Captain-of-New-Zealand-Cricket-Team-Kane-Williamson-Gentlemen-of-Modern-Day-Cricket-and-all-time-great-captain-in-the-Cricket-History

தன்னோடு உள்ள அனைவரையும் அரவணைத்து, அவர்களுக்கும் வாய்ப்பு கொடுப்பதோடு தனது பங்களிப்பையும் கொடுப்பதுதான் ஒரு தலைவனுக்கு அழகு. அப்படிப்பட்ட ஒரு தலைவன் தான் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன். 144 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது அணியை இன்று உலக டெஸ்ட் சாம்பியன் அணியாக மாற்றியுள்ளார் அவர். 


Advertisement

நியூசிலாந்து அணியின் 28 கேப்டன்களால் வெல்ல முடியாததை 29வது கேப்டனான வில்லியம்சன் வென்று காட்டியுள்ளார். அந்த 28 கேப்டன்களில் மார்ட்டின் குரோவ், ஸ்டீபன் பிளம்மிங், மெக்குல்லம் மாதிரியான லெஜன்டுகளும் அடக்கம். இருப்பினும் அவர்களை போல இல்லாமல் முற்றிலும் மாறுபட்டவர் வில்லியம்சன். அதற்கு காரணம் அவரது அணுகுமுறை. எதானல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை ‘கூல் கேப்டன்’ என  சொல்கிறோம் அதே குணாதிசியங்களை தன்னகத்தே அடக்கி வைத்திருப்பவர் வில்லியம்சன். 

image


Advertisement

ஜென்டில்மேன்! 

பாகுபலி முதல் பாகத்தில் வரும் காலகேயர்கள் உடனான போரில் எதிரிகளின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் திரும்பும் வீரர்கள் மத்தியில் வீர வசனம் பேசி தீரத்துடன் போரிட வேண்டும் என சொல்லும் அமரேந்திர பாகுபலி என்ற கற்பனை கதாப்பத்திரத்தின் நிஜ உருவம்தான் வில்லியம்சன். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்திருப்பார்கள். கில் மற்றும் ரோகித் இணை அந்த இன்னிங்ஸில் முதல் விக்கெட்டிற்கு இருவரும் 62 ரன்களை சேர்த்திருப்பார்கள். சவுதி, போல்ட், கிராண்ட்ஹோம் மற்றும் ஜேமிசன் என நான்கு பவுலர்கள் முயன்றும் முதல் 20 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியவில்லை. ஆனால் அதே ஜேமிசனை வைத்து ரோகித்துக்கு கட்டம் கட்டியிருப்பார் வில்லியம்சன். அவரது விடா முயற்சிக்கும், தனது வீரர்களின் மீது வைத்த நம்பிக்கைக்கும் கை மேல் பலனாக ஜேமிசன், ரோகித்தை வெளியேற்றி இருப்பார்.


Advertisement

இந்த ஒரு தருணம்தான் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டியில் அழுத்தம் கொண்டிருந்த தருணம் என சொல்லலாம். அதை கூலாக ஹேண்டில் செய்திருப்பார் வில்லியம்சன். இப்படியாக கேப்டன் பொறுப்பை கடந்த 2016 முதல் நியூசிலாந்து அணியை அனைத்து பார்மேட் கிரிக்கெட்டிலும் வழி நடத்தி வரும் அவர் பல நெருக்கடியான தருணங்களை இப்படி ஹேண்டில் செய்துள்ளார். அதனால் தான் அவரை இந்தியா உட்பட பல நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பேவரைட் வீரராக உள்ளார். 

image

ஆட்டத்தில் ஆக்ரோஷத்தை காட்டுப்பவர்!

வழக்கமாக கிரிக்கெட் அணிகளின் கேப்டன்களில் சிலர் ஆக்ரோஷமான அணுகுமுறையினால் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்துவார்கள். அது அவர்களது உடல் மொழி, பேச்சு முதலியவற்றில் தென்படும். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூட ஆக்ரோஷமான கேப்டன்தான். அதே போல வில்லியம்சன்னும் ஆக்ரோஷமான கேப்டன்தான். என்ன? ஆனால் அந்த ஆக்ரோஷம் அவரது ஆட்டத்தில் மட்டுமே இருக்கும். மற்றபடி மாறா புன்னகையும் சாதுவாக அனைத்தையும் கடந்து செல்வார். தன் அணியில் உள்ள ஒவ்வொருவரும் நட்சத்திரங்கள் என சொல்லும் அளவுக்கு ஆட்டத்தை அணுகுபவர். ஒரு சில நட்சத்திர வீரர்களின் பங்களிப்பால் ஜொலிக்கும் கேப்டன் அல்ல. 

தோல்வியில் கற்ற பாடம்! 

2019 - 50 கிரிக்கெட் உலக கோப்பையை இங்கிலாந்து வென்றதை காட்டிலும் நியூசிலாந்து அணி தோற்றதை குறித்து பேசாதவர்களே இருக்க முடியாது. ஆட்டம் சமனில் முடிந்த போதும் சாம்பியன் பட்டம் இங்கிலாந்துக்கு தான் என விதிகளை மேற்கோள் காட்டி சொன்னது ஐசிசி. அதன் பிறகு கூட தோல்விக்கான காரணத்தை ஏற்று கேப்டன் பதவியை உதராத தில்லான கேப்டன் வில்லியம்சன்.

அதற்கு முன்பும், பின்பும் கூட தோல்விக்கான பொறுப்பை ஏற்று பல கேபடன்கள் பதவியை துறந்தது உண்டு. ரிக்கி பாண்டிங் கூட  2011 உலக கோப்பை காலிறுதி போட்டியில் பெற்ற தோல்வியை தொடர்ந்து தன்னை தானே கேப்டன் பொறுப்பிலிருந்து தள்ளி வைத்துக் கொண்டார். அடுத்த ஒரே ஆண்டில் ஓய்வு முடிவையும் அறிவித்தார். 

image

ஆனால் அந்த தோல்வியில் கற்ற பாடத்தை கொண்டு அணியை கட்டமைத்து இன்று சாம்பியன் அணியாக வலம் வர செய்துள்ளார் வில்லியம்சன். 

“மிகவும் அற்புதமான தருணம் இது. எங்கள் அணி உலக சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றுள்ளது மகிழ்ச்சி. கடந்த 2 ஆண்டுகளாக அணியில் இடம் பிடித்து விளையாடிய 22 வீரர்களும் தங்களது பங்களிப்பை கொடுத்ததன் வெளிப்பாடுதான் இந்த வெற்றி. இது நாங்கள் படைத்துள்ள வரலாறு” என உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு வில்லியம்சன் நிகழ்த்திய வெற்றியுரை. 

ஆல் தி பெஸ்ட் வில்லியம்சன்! மைல்ஸ் டூ கோ! 


Advertisement

Advertisement
[X] Close