[X] Close

யூரோ கோப்பை கால்பந்து தொடர்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பங்கேற்கும் 16 அணிகள்

விளையாட்டு

Euro-Cup-Which-16-teams-will-compete-in-the-pre-quarterfinals

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவுற்ற நிலையில் நாக் அவுட் சுற்றுப் போட்டிகளில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.


Advertisement

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களைக் கொண்ட யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் அனல் பறக்கும் அதிரடி ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இதில், மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன. இந்த 24 அணிகளை ஒரு பிரிவுக்கு நான்கு அணிகள் வீதம் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

image


Advertisement

இந்த லீக் சுற்றுப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் அதிக புள்ளிகளைப் பெற்ற 2 அணிகள் வீதம் 12 அணிகள். அவை, ஏ பிரிவில் இருந்து இத்தாலி, வேல்ஸ் அணிகளும். பி பிரிவில் இருந்து பெல்ஜியல், டென்மார்க் அணிகளும். சி பிரிவில் இருந்து நெதர்லாந்து, ஆஸ்டிரியா அணிகளும், டி பிரிவில் இருந்து இங்கிலாந்து, குரோசியா அணிகளும். இ பிரிவில் இருந்து ஸ்வீடன், ஸ்பெயின் அணிகளும், எஃப் பிரிவில் இருந்து பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அணிகளும் (pre quarter finals) காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகளுக்குள் நுழைந்துள்ளன.

image

அதேபோல லீக் சுற்றுப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நான்கு அணிகளும் அவை, ஏ பிரிவில் இருந்து சுவிட்சர்லாந்து அணியும், சி பிரிவில் இருந்து உக்ரைன் அணியும், டி பிரிவில் இருந்து செக் குடியரசு அணியும் எப் பிரிவில் இருந்து போர்ச்சுகல் அணியும் அடுத்த சுற்றுப் போட்டிக்கு தேர்வாகியுள்ளன. இதையடுத்து 12 + 4 என மொத்தம் 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கின்றன.


Advertisement

image

நாக் அவுட் முறையில் நடைபெறும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகளில்,

  • வேல்ஸ் V/S டென்மார்க்,
  • இத்தாலி V/S ஆஸ்டிரியா,
  • நெதர்லாந்து V/S செக் குடியரசு,
  • பெல்ஜியம் V/S போர்ச்சுகல்,
  • குரோசியா V/S ஸ்பெயின்,
  • பிரான்ஸ் V/S சுவிட்சர்லாந்து,
  • இங்கிலாந்து V/S ஜெர்மனி,
  • சுவீடன் மற்றும் உக்ரைன் ஆகிய அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன. இன்றும் நாளையும் ஓய்வு தினம். இதையடுத்து வருகிற 26ஆம் தேதி முதல் (pre quarter finals) காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள் நடைபெறும். இதில் வெற்றிபெறும் 8 அணிகள் காலிறுதிப் போட்டிகளில் பங்கேற்கும்.

Advertisement

Advertisement
[X] Close