Published : 24,Jun 2021 12:43 PM

சசிகலாவுடன் பேசிய மேலும் 5 நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கம்

who-spoke-to-Sasikala-have-been-sacked-from-the-AIADMK
சசிகலாவிடம் பேசிய சேலம் புறநகர், சிவகங்கை, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் 5 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 
அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, தற்போது அதிமுகவினரிடம் பேசும் ஆடியோ பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக சசிகலாவுடன் தொலைபேசியில் பேசுபவர்கள், தொடர்புடையவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சசிகலாவிடம் பேசிய சேலம் புறநகர், சிவகங்கை, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் 5 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 
இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும் கழகக் கட்டுபாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ஏ. ராமகிருஷ்ணன், ஆர், சரவணன், ஆர். சண்முகப்பிரியா, ராஜகோபால், டி. சுந்தர்ராஜ் ஆகிய 5 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்