[X] Close

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு

Strong-security-for-AIADMK-head-office

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Advertisement

அதிமுகவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, இம்மாதம் 5 ஆம் தேதியிலிருந்து  கட்சி தலைமை அலுவலகம் வருவதற்கு, தினகரன் முடிவு செய்துள்ளார். அன்று, அனைத்து பிரமுகர்களையும் சென்னைக்கு வரும்படியும் தினகரன் அழைப்பு விடுத்திருக்கிறார். இதனிடையே, நேற்று கட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கட்சிக்குள் டிடிவி தினகரனுக்கும், முதல்வர் எடப்பாடிக்கும் இடையே மறைமுக மோதல் இருந்து வரும் நிலையில் முதலமைச்சர் தனது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

டிடிவி தினகரன் 5 ஆம் தேதியிலிருந்து கட்சி அலுவலகம் வர உள்ளதாக சொல்லப்பட்டுள்ள நிலையில் தினகரன் ஆதரவாளர்கள் அவ்வப்போது அதிமுக அலுவலகத்திற்கு வருவார்கள் என கருதப்படுகிறது. அதனால், அவ்வை சண்மு‌கம் சாலையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close