[X] Close

அமேசானில் ஆர்டர் செய்ததோ பொம்மை ரிமோட் கார் - வந்ததோ ‘பார்லே ஜி’ பிஸ்கெட்!

வணிகம்

Toy-Remote-Car-Ordered-on-Amazon-and-Parle-G-Biscuit-Arrived-in-the-parcel-and-the-Customer-got-shocked-and-shared-in-Facebook-about-this-in-Delhi-UT-of-India

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மூலம் இ-காமர்ஸ் நிறுவனங்களின் தளங்களில் விண்டோ ஷாப்பிங் செய்வது பெரும்பாலான மக்களுக்கு வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் தலைநகர் டெல்லியின் வசித்து வரும் விக்ரம் புரகோஹெய்ன், அமேசானில் விளையாடும் வகையில் ரிமோட் கார் ஒன்றை ஆசை ஆசையாய் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு பார்சலில் வந்ததோ ‘பார்லே ஜி’ பிஸ்கெட். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த விக்ரம் அதனை அப்படியே படம் பிடித்து பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


Advertisement

“அமேசானில் ஆர்டர் செய்ததோ விளையாட்டு பொம்மை கார் - வந்ததோ ‘பார்லே ஜி’ பிஸ்கெட். இப்போது இந்த பிஸ்கெட்டுகளுக்காக நான் டீ தயார் செய்ய வேண்டி உள்ளது” என பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார் அவர். 

இது பெருவாரியான நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் இது குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இ-காமர்ஸ் நிறுவன ஆர்டர்களில் இது மாதிரியான பார்சல் மாறி வருவது வழக்கமான ஒரு நிகழ்வாக அமைந்து வருகிறது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close