[X] Close

வீட்டிற்கு வரவழைத்து பாலியல் தொல்லை: மாணவியுடன் பேசிய ஆடியோ வெளியாகி ஆசிரியர் கைது

குற்றம்

முதுகுளத்தூரில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளுடன் ஆசிரியர் பேசிய ஆடியோ வைரல் ஆன நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியான பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் இருந்து 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் ஹபீப் என்பவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.

image


Advertisement

பள்ளியில் படிக்கும் மாணவியின் செல்போன் எண்ணை வாங்கி அவரது வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் பேசி புத்தகத்தை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வருமாறு தெரிவித்துள்ளார். ஒருவேளை அப்படி வர மறுத்தால், ’உனக்கும் மார்க் குறைவாக போட்டு தேர்ச்சியடைய விடாமல் செய்து விடுவேன்’ என்று மிரட்டல் விடுத்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுபோல பல மாணவிகள் தனது வீட்டிற்கு புத்தகத்துடன் வந்துள்ளதாகவும் அதுபோல் நீயும் வரவேண்டுமென்று ஒரு மாணவியுடன் ஆசிரியர் ஹபீப் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. பள்ளி ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராகவேந்திரர் ரவி விசாரணை நடத்தி வந்தார். போலீசார் விசாரணையை அடுத்து ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.


Advertisement

Advertisement
[X] Close