[X] Close

அமெரிக்காவின் வேலைவாய்ப்புகள் அன்னியர்களுக்கு செல்வதா?: ட்ரம்ப்-க்கு எம்.பி.க்கள் கடிதம்

Will-America-s-Jobs-Come-to-Foreigners--Letter-to-MPs-to-Trump

அமெரிக்காவில் உள்ள வேலைவாய்ப்புகள் வெளிநாட்டினருக்கு செல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அதிபர் ட்ரம்ப்-க்கு அந்நாட்டு எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.


Advertisement

அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் எச்1பி விசா விதிகளில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதுள்ள சட்டங்களில் சில குறைபாடுகள் உள்ளதால் அதைப் பயன்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்கள் பயனடைவதாகவும், அந்தக் குறைகளை களையும் வகையில் சட்டத்திருத்தம் தேவைப்படுவதாகவும் எம்.பி.க்கள் தங்கள் கடிதத்தில் கூறியுள்ளனர்.


Advertisement

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து எண்ணற்ற இளைஞர்கள் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வெளிநாட்டினருக்கு வேலைகள் செல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளது அங்கு பணிபுரியும் வெளிநாட்டினர் மத்தியிலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close