விஜய்யின் ’பீஸ்ட்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு இணையாக அந்த போஸ்டரில் அவர் வைத்திருக்கும் துப்பாக்கி தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
‘மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. நேற்று இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் பிறந்தநாள். இன்று விஜய்யின் பிறந்தநாள். இருவரின் பிறந்தநாளையும் சிறப்பிக்கும் விதமாக படக்குழு ஃபர்ஸ்ட் லுக், செகெண்ட் லுக் என இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. அதில், பெரிய துப்பாகியுடன் விஜய் நின்றிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
போஸ்டரில் விஜய் வைத்துள்ள துப்பாக்கி ஷார்ட் கன் என்பதால், ’அதில் எப்படி தூரத்தில் இருப்பவர்களை குறிபார்க்க பயன்படும் 8x ஸ்கோப்பினை பயன்படுத்த முடியும்?’ என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வகை ஸ்கோப், ஸ்னைப்பர் வகை துப்பாக்கிகளில் பயன்படுத்தக் கூடியது என்பதால், அதனை குறைவான தூரத்தில் இருக்கும் இலக்குகளை சுடப் பயன்படுத்தும் ஷார்ட் கன்களில் பயன்படுத்த தேவையில்லை என விளக்கங்களையும் முன்வைத்தனர்.
அதே நேரம், விஜய் வைத்துள்ள துப்பாக்கியில் பயன்படுத்தப்பட்டுள்ள ஸ்கோப் 8x ஸ்கோப் போல தோற்றமளித்தாலும், அது ஷார்ட் கன்களில் பயன்படுத்தப்படும் ஸ்கோப்தான் எனவும் சிலர் விளக்கமளித்தனர். அதுமட்டுமின்றி, முதலில் வெளியிடப்பட்ட பீஸ்ட் போஸ்டரில் ஆக்ஷன் என்பது A-c-t-o-n என எழுத்துப் பிழையோடு இருந்ததும் சமூக வலைதளங்களில் பகடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்