Published : 02,Aug 2017 10:53 AM
சொத்துக்குவிப்பு வழக்கு: சசிகலாவின் சீராய்வு மனு விசாரணை நடைபெறவில்லை

அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலாவின் சீராய்வு மனு மீதான விசாரணை இன்று நடைபெறவில்லை.
விசாரணை பட்டியலில் இருந்து சசிகலாவின் மனு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் மீதான விசாரணை நடைபெறவில்லை. சீராய்வு மனுவை நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் விசாரிக்கக் கூடாது என சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது என்றும் இதைத் தொடர்ந்து நாரிமன் தன்னை விடுவித்துக்கொண்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் ஃபாலி நாரிமன் ஆஜராகியிருந்த நிலையில் அவரது மகன் ரோஹிண்டன் நாரிமன் அது தொடர்பான விசாரணையில் நீதிபதியாக இருப்பது சரியாக இருக்காது என சசிகலா தரப்பில் கூறப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.