[X] Close

மதுரை: ’26 பவுன் திருட்டு’ என காவல்துறையினரிடம் நாடகமாடிய மூதாட்டி

தமிழ்நாடு,வீடியோ ஸ்டோரி

மதுரையில் 26 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் புகார் அளித்த மூதாட்டியை காவல்துறையினர் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.


Advertisement

மதுரை அண்ணாநகர் எல்ஐசி காலனியை சேர்ந்த 80 வயது மூதாட்டி சரஸ்வதி என்பவர், மகன் வீட்டில் வசித்து வருகிறார். மகனும், மருமகளும் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் இருந்த 26 சவரன் நகையை எடுத்து தனது மகளுக்கு கொடுத்து அனுப்பிவிட்டார். இதை மறைப்பதற்காக அடையாளம் தெரியாத நபர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து, நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக மகனிடமும், காவல்துறையிடமும் கூறியுள்ளார்.

அதன் பேரில் விசாரணை நடத்தியதில், மூதாட்டி பொய் புகார் அளித்தது அம்பலமானது. வறுமையில் வாடிய மகளுக்கு உதவுவதற்காகவே நகையை கொடுத்தாக மூதாட்டி விசாரணையில் ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து மூதாட்டியை எச்சரித்து காவல்துறையினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close