Published : 02,Aug 2017 08:48 AM
தனிநபர் கழிப்பிடம் கட்டியதில் மோசடி

சேலம் மாவட்டத்தில் தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி செய்ததாக ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் தர்மத்தாய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் ஊராட்சியிலுள்ள 700 குடும்பங்களுக்கு தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அதில், 5 பேருக்கு மட்டும் கழிப்பிடம் கட்டி கொடுத்துவிட்டு, 7 லட்சத்து 40ஆயிரம் ரூபாயை ஊராட்சிமன்ற தலைவர் தர்மத்தாயும், செயலாளர் மூர்த்தியும் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. தணிக்கையின் போது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் இருவர் மீதும் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தர்மத்தாயிடம் போலீஸார் விசாரித்த போது, தனது கணவர் செல்வராஜும், செயலாளர் மூர்த்தியுமே இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இதில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.