[X] Close

கேரளாவில் காணாமல் போன சிறுமி 2 ஆண்டிற்கு பின் 4 மாத குழந்தைக்கு தாயாக மதுரையில் மீட்பு

குற்றம்,தமிழ்நாடு

A-14-year-old-Teen-girl-Missing-in-Kerala-s-Palakkad-District-two-years-ago-was-found-with-a-4-month-old-baby-in-Madurai-Tamil-Nadu-State

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் காணாமல் போன நிலையில் 4 மாத குழந்தைக்கு தாயாக தமிழ்நாட்டில் போலீசாரால் அந்த சிறுமி அடையாளம் காணப்பட்டுள்ளார். மதுரையில் 22 வயதுடைய நபர் ஒருவருடன் அவர் வாழ்ந்து வந்துள்ளார். 


Advertisement

கடந்த 2019இல் அந்த சிறுமி, சம்மந்தப்பட்ட நபருடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பாலக்காடு பகுதியில் கேட்டரிங் தொழில் செய்து வந்த சிறுமியின் தாயாருடன் அந்த 22 வயது நபரும் பணியாற்றி வந்துள்ளார். இருவரும் இணைந்து வாழ்வது அவரது குடும்பத்தாருக்கு தெரியுமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் இந்த சிறுமி குறித்து கேரள போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் விசாரித்ததில் மதுரையில் அந்த 22 வயது நபரின் வீட்டில் சிறுமி வசித்து வந்துள்ளார் என்ற விவரத்தை அறிந்துள்ளனர் போலீசார். அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்களுக்கு அந்த நபரின் மனைவி என இந்த சிறுமி அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். அவரது வயது குறித்த விவரங்கள் அந்த நபரின் உறவினருக்கு தெரியுமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 


Advertisement

போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த சிறுமி மற்றும் 4 மாத குழந்தையின் டி.என்.ஏ மாதிரியை சேகரித்து அதன் அடிப்படையிலும் வழக்கை விசாரிக்க உள்ளனர். 


Advertisement

Advertisement
[X] Close