[X] Close

ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் ஐஜி

இந்தியா

Ex-Punjab-Inspector-General-of-Police-Kunwar-Vijay-Pratap-joins-AAP

பஞ்சாப் மாநில காவல்துறையின் முன்னாள் ஐஜி குன்வார் விஜய் பிரதாப் ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.


Advertisement

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் அக் கட்சியில் இணைந்தார் குன்வார் விஜய் பிரதாப். அப்போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் "குன்வார் விஜய் பிரதாப் அரசியல்வாதி அல்ல. அவர் சாதாரண மக்களுக்கான போலீஸ்காரராக இருந்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.

image


Advertisement

பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கும் சூழலில் இம்முறை ஆம் ஆத்மி கட்சி அங்கு ஆட்சியை பிடிப்பதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்துக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும் அவர் சீக்கிய சமூகத்தை சேர்ந்தவராக இருப்பார் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close