ஜூலை மாதம் முதல் கார்களின் விலையை உயர்த்த மாருதி நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. மூலப்பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால் விற்பனை விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது என, மாருதி சுசூகி நிறுவனம் பங்குச்சந்தைக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறது. ஆனால், எவ்வளவு விலை ஏற்றம் இருக்கும் என்பது அறிவிக்கப்படவில்லை. மாடல்களுக்கு ஏற்ப விலை ஏற்றம் இருக்கும் என தெரிவித்திருக்கிறது.
இந்த ஆண்டில் மாருதி நிறுவனத்தின் கார்கள் நான்காவது முறையாக விலை ஏற்றம் செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் ஒரு முறை விலை ஏற்றம் இருந்தது. அதேபோல ஏப்ரலில் இரு முறை விலை ஏற்றம் நடந்தது. தற்போது நான்காவது முறையாக ஜூலை முதல் கார்களின் விற்பனை விலையை மாருதி நிறுவனம் உயர்த்த இருக்கிறது.
பல மூலப்பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால் விலை ஏற்றம் தவிர்க்க முடியாததது என மாருதி தெரிவித்திருக்கிறது. ஸ்டீல் விலை கடந்த சில மாதங்களாக கடுமையாக அதிகரித்திருக்கிறது. தவிர, செமி கண்டக்டருக்கான பற்றாக்குறையும் சந்தையில் இருந்து வருவதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆட்டோமொபைல் துறையில் செமி கண்டக்டர் பயன்படுத்துவது சமீபகாலங்களில் மிகவும் உயர்ந்திருக்கிறது. வாகனங்களின் செயல்பாடுகளுக்கு செமி கண்டக்டர்களின் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜனவரி மாதம் அதிகபட்ச விலையேற்றமாக ரூ.34,000 இருந்தது. ஏப்ரலில் சராசரியாக 1.6 சதவீதம் அளவுக்கு விலை ஏற்றம் இருந்தது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!