Published : 02,Aug 2017 07:45 AM

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சோகம்: நண்பர்களைக் காப்பாற்றிய மாணவர் உயிரிழப்பு

Birthday-celebration-tragedy--student-death-to-save-friends

மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் பரிசல் கவிழ்ந்த விபத்தில் தங்களைக் காப்பாற்றியபோது தன் நண்பர் உயிரிழந்ததாக உயிருடன் மீட்கப்பட்ட மற்ற மாணவர்கள் தெரிவித்தனர்.

புக்கம்பட்டியைச் சேர்ந்த தனியார் கலைக்கல்லூரி மாணவர் மதன். தனது அத்தை மகன் தமிழரசுவின் பிறந்த நாளைக் கொண்டாட சக மாணவர்களுடன் இணைந்து, மேட்டூர் அணையின் கூனாண்டியூர் நீர்த்தேக்கப் பகுதிச் சென்றுள்ளார். அங்கு மீனவர்கள் பயன்படுத்தும் பரிசலை எடுத்துக்கொண்டு ஆழமான பகுதிக்குச் சென்று, அங்கு தமிழரசுவின் பிறந்த‌நா‌ள் விழாவைக் கொண்டாடும் பொருட்டு அனைவரும் மது அருந்தியிருக்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக பரிசல் கவிழ்ந்த நிலையில், நண்பர்கள் 6 பேரும் தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடி இருக்கின்றனர். அப்போது கடுமையாக முயற்சி செய்து பரிசலை நிமிர்த்தி 5 நண்பர்களையும் காப்பாற்றிய மதன் சேற்றில் சிக்கி, நீச்சல் அடிக்க முடியாமல் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், உடனிருந்த நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்