Published : 21,Jun 2021 09:35 AM

பஞ்சாபிலும் ஆட்சியமைக்க முனைப்பு காட்டும் ஆம் ஆத்மி

Aam-Aadmi-Party-seeks-to-rule-Punjab--Arvind-Kejriwal-visits-Punjab

டெல்லியில் ஆட்சியிலுள்ள ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே கட்சியை வலுப்படுத்தும் விதமாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அம்மாநிலத்திற்கு செல்கிறார்.

பஞ்சாப் மாற்றத்தை விரும்புவதாகவும் அம்மாநில மக்களின் ஒரே நம்பிக்கை ஆம் ஆத்மி கட்சிதான் எனவும் டிவிட்டரில் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ளார். அவரது இன்றைய பயணத்தின்போது, முன்னாள் காவல்துறை அதிகாரி விஜய் பிரதாப், ஆம் ஆத்மி கட்சியில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, GO BACK KEJRIWAL என குறிப்பிட்டு பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். பஞ்சாப் மாநிலத்திற்கு ஆம் ஆத்மி கட்சி தேவையில்லை என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்