Published : 20,Jun 2021 04:19 PM
கொரோனா ஊரடங்கு தளர்வு : சுற்றுலா தலங்களுக்கான தடை தொடர்கிறது

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக வரும் 30ஆம் தேதி வரையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது அரசு. அதன்படி தொற்று பாதிப்பு அதிகமுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் உட்பட 11 மாவட்டங்களில் முன்னதாக அறிவிக்கப்பட்ட தளர்வுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல பொது மக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கான தடை தொடர்கிறது. குறிப்பாக நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியாளர்களிடமிருந்து இ - பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய மாவட்டங்களில் இந்த இ - பாஸ் நடைமுறை அவசர காரணங்களுக்கு மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.