[X] Close

துளிர்க்கும் நம்பிக்கை: அம்பத்தூரில், 2 குடும்பத்துக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவி

துளிர்க்கும் நம்பிக்கை

புதிய தலைமுறையில் துளிர்க்கும் நம்பிக்கை வழியாக உதவி கோரிய குடும்பத்தினருக்கு உதவ முன்வந்த messenger mission தொண்டு நிறுவனம்- நெகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்ட பயனாளிகள்.


Advertisement

சென்னை அம்பத்தூர் அடுத்த மேனாம்பேடு பகுதியை சேர்ந்தவர் நவசங்கர். இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது ஊரடங்கால் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 'மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் உணவுக்குகூட வழியில்லை' எனக்கூறி புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை வாயிலாக உதவி கோரினார்.

image


Advertisement

இந்தநிலையில் புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை குழுவினர் messenger mission என்ற தொண்டுனிறுவனம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ராபின் சாமை தொடர்புகொண்டு உதவிட ஏற்பாடு செய்தனர். அதன் வாயிலாக நவசங்கர் குடும்பத்தினருக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், சோப்பு, பேஸ்ட் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கியதோடு செலவிற்காக 500 ரூபாய் பணமும் வழங்கப்பட்டது.

இதேபோல் அதே பகுதியில் வசிக்கும் லட்சுமணன் என்பவர் தனது தாயுடன் வசித்து வந்த நிலையில், கொரோனா முதல் ஆலையில் தொற்று பாதிக்கப்பட்டு வேலையை இழந்தவர், தற்போது வரை வேலை கிடைக்காததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து அவரது குடும்பத்தினருக்கும் அரிசி மளிகை பொருட்கள் உட்பட 500 ரூபாய் பணம் வழங்கப்பட்டது.

புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை சார்பில் அம்பத்தூர் பகுதியில் வசிக்கும் இந்த 2 குடும்பத்திற்கு உதவி கிடைக்கப்பட்டது இந்த போதாத காலத்தில் ஆறுதலாக அமைந்தது. எனினும் இரண்டு குடும்பத்தினருக்கும் தற்போது போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் பல மாதமாக வீட்டு வாடகை நிலுவையில் உள்ளதால் ஏதேனும் வேலை தேவைப்படுவதாகவும் கோரிக்கை முன்வைத்தனர்.


Advertisement

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகளை தி மேற்கொள்ளப்பட்ட சிறு முயற்சி இது. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

imageஉதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'


Advertisement

Advertisement
[X] Close