[X] Close

திருப்பத்தூர்: பிச்சைக்காரன் போல நடித்து வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை

குற்றம்,வீடியோ ஸ்டோரி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பிச்சைக்காரன் போல நடித்து வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபடும் நபரை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Advertisement

வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பிச்சை எடுப்பது போல் வீடுகளுக்குள் நுழைந்து செல்போன், லேப்டாப், பணம், நகை உள்ளிட்டவற்றை அடையாளம் தெரியாத நபர் திருடிச் செல்வதாக காவல்நிலையத்திற்கு புகார்கள் வந்துள்ளன. கூஜா காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள பயாஸ் என்பவர் வீட்டில் செல்போன், லேப்டாப், செட்டியப்பணூர் பகுதியில் உள்ள சத்யா என்பவர் வீட்டில் ஒரு சவரன் நகை, 20 ஆயிரம் ரொக்கதை அந்த அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றுள்ளார். இந்நிலையில் ஒரே பாணியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வரும் நபரை விரைந்து கைது செய்ய வேண்டும் என வாணியம்பாடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close