Published : 19,Jun 2021 12:36 PM
எனது அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இன்று பிறந்தநாள் காணும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தியின் 50-வது பிறந்தநாள் விழா இன்று (ஜூன் 19) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சித்தலைவர்கள் உள்பட பலதரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ராகுல் காந்திக்கு தெரிவித்துள்ள வாழ்த்து பதிவில், ''எனது அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். சமத்துவ இந்தியாவை உருவாக்குவதற்காக அவரது தன்னலமற்ற, அயராத உழைப்பைப் பாராட்டுகிறேன். காங்கிரஸ் கட்சியின் நெறிமுறைகள் குறித்த அவரது அர்ப்பணிப்பு முன்மாதிரியாக உள்ளது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
Wishing my beloved brother @RahulGandhi on his birthday and I join others in praising his selfless, untiring work to establish an egalitarian India in every aspect. His commitment to the ethos of the Congress Party has been exemplary. pic.twitter.com/nvjMkbYDVP
— M.K.Stalin (@mkstalin) June 19, 2021